விஜயகாந்தை பார்த்து காத்துக்கோங்க விஷால்!... அப்படி என்ன செய்தார் தெரியுமா?...
அரசியலில் விஜயகாந்தின் நடவடிக்கைகள் சிலரால் விமர்சிக்கப்பட்டாலும் சினிமா என்று வரும் போது அவர் எப்போதும் பலருக்கும் பிடித்தமான, பலருக்கும் உதவி செய்துவருமான, பலரையும் தூக்கி விட்டவருமான, பலரையும் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றியவருமான ஒரு நபராகத்தான் இருக்கிறார். திரைத்துறையில் இதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்கிற அளவுக்கு ஒரு நல்ல மனிதராகத்தான் விஜயகாந்த் இருக்கிறார்.
அடிப்படையில் நடிகர் என்றாலும் படக்குழுவினருக்கோ, இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ ஒரு பிரச்சனை எனில் வேட்டியை மடித்துக்கொண்டு முதல் ஆளாக உதவிக்கு வருபவர்தான் விஜயகாந்த். அதனால்தான் திரையுலகம் கொண்டாடும் ஒரு மனிதராக இப்போதும் இருக்கிறார். நடிகர் சங்க தலைவராக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து சில கோடிகளை கணக்கில் வைத்து விட்டு சென்றவர் அவர்.

நடிகர் விஷாலும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளர் என முக்கிய பதவிகளில் இருந்தவர்தான். ஆனால், இவர் மீது பல புகார்களை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். பல மோதல்கள் ஏற்பட்டு நடிகர் சங்கத்தை அரசு கையில் எடுக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் தயாரிப்பாளர்களையும் கதறவிடுபவர் விடுபவர்.
தமிழ் சினிமாவில் பிரபு-குஷ்பு நடித்த ‘சின்னத்தம்பி’ உட்பல பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கே.பி.பிலிம்ஸ் பாலு. விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க நினைத்த அவர் விஷாலுக்கு ரூ.4 கோடி அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால், சில வருடங்கள் ஆகியும் கால்ஷீட் கொடுக்காமல் விஷால் இழுத்தடித்து வந்தார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு பாலு மரணமடைந்தார். எனவே, அவரின் இறுதி அஞ்சலியில் பேசிய விஷால் ‘கண்டிப்பாக ஒரு படம் நடித்துக்கொடுத்து அப்படத்தில் வரும் முழு லாபத்தையும் உங்களுக்கு கொடுப்பேன்’ என பாலுவின் குடும்பத்தாரிடம் சூளுரைத்தார் . ஆனால், அதன்பின் அதற்கான வேலைகள் எதுவும் தற்போதுவரை நடக்கவில்லை.

இந்த சூழலில் தான் விஜயகாந்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தரங்கை சண்முகம் என்கிற தயாரிப்பாளர் விஜயகாந்தை வைத்து ஒரு படம் எடுத்தார். படம் பாதி வளர்ந்த நிலையில் அவர் மரணமடைந்தார். உடனே தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தரை அழைத்த விஜயகாந்த் ‘இந்த படத்தை நீயே தயாரி’ எனக்கூறினார் விஜயகாந்த். படம் முடிந்து வெளியாகி கிடைத்த எல்லா லாபத்தையும் அந்த தயாரிப்பாளரின் குடும்பத்தாரிடம் கொடுத்தார்...
அவர்தான் விஜயகாந்த்!.....