விஜயகாந்த் சொன்ன ஒரு சொல்!.. மாறிய நடிகரின் எதிர்காலம்.. வெளிவராத தகவல்...

by adminram |

235bb1ef590387e9667b13440b772e16

அரசியலில் விஜயகாந்தின் நடவடிக்கைகள் சிலரால் விமர்சிக்கப்பட்டாலும் சினிமா என்று வரும் போது அவர் எப்போதும் பலருக்கும் பிடித்தமான, பலருக்கும் உதவி செய்தவருமான, பலரையும் தூக்கி விட்டவருமான, பலரையும் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றியவருமான ஒரு நபராகத்தான் இருக்கிறார். திரைத்துறையில் இதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்கிற அளவுக்கு ஒரு நல்ல மனிதராகத்தான் விஜயகாந்த் இருக்கிறார்.

அடிப்படையில் நடிகர் என்றாலும் படக்குழுவினருக்கோ, இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ ஒரு பிரச்சனை எனில் வேட்டியை மடித்துக்கொண்டு முதல் ஆளாக உதவிக்கு வருபவர்தான் விஜயகாந்த். அதனால்தான் திரையுலகம் கொண்டாடும் ஒரு மனிதராக இப்போதும் இருக்கிறார். படக்குழுவினர் மட்டும் என்று இல்லை. தனக்கு பழக்கமில்லாக அறிமுக நடிகர்களின் வாழ்க்கையையும் அவர் மாற்றியுள்ளார்.

539c3933aecf91466ec38cfc49a0ca1c

ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இப்படத்திற்கு பின் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், முதல் படத்திலேயே அவருக்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டது. படிப்பையெல்லாம் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்தவர் ஸ்ரீகாந்த். பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்த இப்படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார். இப்படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக பூமிகா நடித்திருந்தார். இப்படத்தின் பாடல் அனைத்தும் செம ஹிட்.

7bb3f1b8b21badbc65b70a96eb0c9610

ஆனால், இப்படம் வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த நேரம், ஸ்ரீகாந்தின் மேனேஜர் அப்பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்தினிடம் சென்று ஓவர் பந்தாவாக பேசியுள்ளார். ‘ஸ்ரீகாந்தின் கால்ஷீட்டை பலரும் கேட்கின்றனர். அவரை வைத்து மீண்டும் நீங்கள் படம் தயாரிப்பதாக இருந்தால் அந்த கால்ஷீட்டை உங்களுக்கு ஸ்ரீகாந்த் கொடுப்பார். இல்லையேல் அவர் வேறுபடங்களில் நடிப்பார்’ என்கிற ரீதியில் பேச கடுப்பான ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவரை திட்டி வெளியே அனுப்பிவிட்டார். அதன்பின் ஸ்ரீகாந்திடம் போன் செய்து ‘நான் வளர்த்துவிட்ட பையன் நீ. என்னிடம் இவ்வளவு திமிரா?. உன் படத்தையே தியேட்டரில் நிறுத்திவிடுகிறேன் பார்’ எனக்கூறிவிட்டு அதற்கான பணிகளிலும் இறங்கியுள்ளார்.

cdc22274f7891022ebefa2aac0253a25

இது மட்டும் நடந்துவிட்டால் ஸ்ரீகாந்தின் சினிமா வாழ்க்கையே அஸ்தமனமாகி விடும். எனவே, என்ன செய்வதென்று பதறிய ஸ்ரீகாந்திடம் ‘நீ போய் விஜயகாந்தை பார்.. அவர் உனக்கு உதவி செய்வார்’ என பலரும் கூற, விஜயகாந்திடம் சரணடைந்தார் ஸ்ரீகாந்த். ஆஸ்கர் ரவிச்சந்திரன் விஜயகாந்தின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர். அப்படித்தான் சினிமாவிலும் நுழைந்தார். விஜயகாந்த் மீது பற்று கொண்டவர். அவரை போனில் அழைத்த விஜயகாந்த் ‘நீ உருவாக்கிய பையனின் வாழ்க்கையை நீயே அழித்துவிடாதே’ எனக்கூற ரோஜாக்கூட்டம் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கும் முடிவை கைவிட்டார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்..

விஜயகாந்த் சொன்ன அந்த ஒரு வார்த்தை ஸ்ரீகாந்தின் திரை வாழ்க்கையை காப்பாற்றியது...

Next Story