மாஸ்டருக்கு பின் மாஸ் ஆக மாறும் விஜய்சேதுபதி

கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. சமீபத்தில் கூட இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னையில் இயக்குனர் லோகேஷ் படமாக்கினார். இதனை அடுத்து ’மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதி தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இரண்டு ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். மாஸ்டர் படத்தின்ன் வில்லன் கேரக்டருக்காக உடல் எடையை ஏற்றிய விஜய் சேதுபதி தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்காக உடல் எடையை குறைக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவர் சில பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த படத்தில் அவரது தோற்றம் மாஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது 

விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை ’மாஸ்டர்’ படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் மீண்டும் இணையும் இந்த படம் ’நானும் ரவுடிதான்’ படத்தை போல வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Published by
adminram