பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் ரெய்டு செய்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவாரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் இன்று கர்நாடகாவில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு சென்றுள்ளனர். அப்போது ராஷ்மிகா வீட்டில் இல்லை. ராஷ்மிகாவின் தந்தை மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பதால் அவர் வரி ஏய்ப்பு ஏதேனும் செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
ரெய்டில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைத்ததா என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…