More

மாஸ்டர் கதை என்னுடையது.. சண்டைக்கு நிற்கும் கதாசிரியர்.. லோகேஷ் நீங்களுமா?

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நாயகிகளாக ஆண்ட்ரியா, மாளவிகா நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரமான வில்லனிற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். தொடர்ந்து, ஷாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கடந்த தீபாவளி தினத்தில் வர வேண்டிய படம் இந்த பொங்கலில் தான் வெளியிடப்பட இருக்கிறது. 

Advertising
Advertising

தளபதி படம் ரீலிஸை நெருங்கினாலே, எதும் பஞ்சாயத்து வரிசை கட்டி நிற்கும். இன்னும் சில தினங்களே மாஸ்டர் வெளியீட்டிற்கு இருக்கும் நிலையில், இதோ புதிய பிரச்சனையை படக்குழு சந்தித்து இருக்கிறது. 

கதாசிரியர் ரங்கதாஸ் என்பவர் ‘மாஸ்டர்’ கதை என்னுடையது எனப் புகாரளித்து இருக்கிறார்.  சில படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ள ரங்கதாஸ், 2017-ம் ஆண்டில் ‘நினைக்கும் இடத்தில் நான்’ என்ற தலைப்பில் ஒரு கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அது தான் மாஸ்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இதை ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் மூலம் அறிந்து கொண்டதாக தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். என்னுடைய கதையையும், ‘மாஸ்டர்’ படத்தின் கதையையும் ஒப்பிட்டுப் பார்த்து எழுத்தாளர்கள் சங்கத்தில் ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். சங்கத்திலும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

விஜயின் படம் தொடர்ந்து கதை திருட்டு பிரச்சனையை சந்தித்து வருகிறது. தன்னுடைய கதையை முன்னணி இயக்குனர்கள் திருடியுள்ளார் எனக் கூறிய உதவி இயக்குனர்களுக்கு நஷ்ட ஈடும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கத்தி, சர்க்காரும் இதே சிக்கலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

Published by
adminram

Recent Posts