எத்தனை படத்தில் இது நடந்திருக்கிறது? விஜய்சேதுபதியின் நீண்ட நாள் வருத்தம்

by ராம் சுதன் |
எத்தனை படத்தில் இது நடந்திருக்கிறது? விஜய்சேதுபதியின் நீண்ட நாள் வருத்தம்
X

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பெயரோடு வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நன்கு அறிந்த நடிகராகவும் இருந்து வருகிறார். கொடுக்கிற கேரக்டரை அப்படியே கண்முன் நிறுத்தி மக்களின் கைத்தட்டல்களை மிக எளிதாக வாங்கக் கூடிய நடிகராகவும் இருக்கிறார் நம் மக்கள் செல்வன்.

தயாரிப்பாளர்களின் சூழ்நிலையை அறிந்து செயல்படுபவர். அதனால்தான் தயாரிப்பாளரின் ஹீரோ விஜய்சேதுபதி என்று கூட சொல்லலாம். இவரால் பெரிய அளவில் நஷ்டம் என அடைந்ததில்லை. ஆனால் டிஎஸ்பி படம் மட்டும் யாரும் எதிர்பாராத தோல்வியை தழுவி வசூலில் மண்ணை கவ்வியது. அப்போது கூட ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார் விஜய்சேதுபதி.

இப்போது சமீபகாலமாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் பற்றிய பேச்சுத்தான் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகிறது. அதாவது டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது புதிய விதிமுறைய விதித்து நடிகர்களுக்கு சம்பளத்தை கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. இதே மாதிரி மற்ற தயாரிப்பாளர்களும் பின்பற்றினால் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதாவது பராசக்தி படத்தை தயாரிப்பது டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான். ஆரம்பத்தில் நடிகர்களுக்கு முன்பணமாக சில தொகையை கொடுத்து மீதி சம்பளத்தை பிராஃபிட் ஷேர் அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ளலாம் என கூறித்தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் நடிகர்களும் அந்தப் படத்திற்கு முதலாளிகளாக மாறிவிடுகிறார்கள். என்ன செலவு ஆகிறது? எப்படி திட்டமிட வேண்டும் என ஒரு தயாரிப்பாளராகவும் அந்த நடிகர் யோசிக்க முடியும். இனிமேல் புரோமோஷனும் நல்ல முறையில் நடக்கும். அனைத்து நடிகர்களும் புரோமோஷனுக்கு வர சம்மதிப்பார்கள்.

ஆனால் விஜய்சேதுபதி சொல்லும் போது இதுவரை அவர் படத்திற்கு சரியான புரோமோஷன் நடந்ததே இல்லையாம். கதை நன்றாக இருந்தாலும் புரோமோஷனை சரியாக என் படங்களுக்கு யாரும் பண்ணதே இல்லை என விஜய்சேதுபதி கூறியதாக சித்ரா லட்சுமணன் இந்த தகவலை கூறினார்.

Next Story