இப்போதான் மகாராஜாவா வாழுறாரு.. அது புடிக்கலையா? சூர்யா 45ல் களமிறங்கும் VJS?
ஒரு வழியாக மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டி இருக்கிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர், பேட்ட போன்ற திரைப்படங்களுக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவே அவரை காட்ட பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். அதற்கும் சம்மதம் தெரிவித்து தமிழ் முதல் ஹிந்தி வரை பல படங்களில் வில்லனாக நடித்து வில்லன் கதாபாத்திரத்திலும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார் விஜய் சேதுபதி.
சொல்லப்போனால் ஹீரோவாக ரசித்ததை விட வில்லனாக மக்கள் அவரை கொண்டாட ஆரம்பித்தனர். இருந்தாலும் ஒரு சூப்பர் ஹீரோவாக ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்குள் இருந்தது. அப்படி ஒரு திரைப்படம் தான் மகாராஜா திரைப்படம். அந்த படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பெரிய அளவில் பேசப்பட்டது. படமும் 100 கோடி கிளப்பில் இணைந்தது.
அதிலும் சீனா வரை சென்று சாதனை படைத்தது மகாராஜா திரைப்படம். சரி இனிமே ஹீரோவாகவே நடிக்க கவனம் செலுத்தலாம் என நினைத்த விஜய் சேதுபதி திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் எண்டிரி ஆனார். அந்த நிகழ்ச்சி மூலமும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது .இதற்கிடையில் சூர்யாவை வைத்து ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45 வது படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கு விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவிப்பார் என கோடம்பாக்கத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை இல்லாத அளவு இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு அத்க சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார்களாம். அதே சமயம் விஜய் சேதுபதி சூர்யா 45 படத்தில் நடித்தால் கூட அது சூர்யாவுக்கு ஒரு விதத்தில் கெட்ட பெயராக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏனெனில் இந்த படம் ஒரு வேளை வெற்றி பெற்றால் அது விஜய் சேதுபதி நடித்து அதனால் தான் ஹிட்டானது என்ற பெயர் கூட வந்துவிடும். ஏனெனில் கங்குவா திரைப்படம் அந்த அளவு விமர்சனத்தை சந்தித்தது. அதனால் அந்த விமர்சனத்தை எல்லாம் போக்குவதற்காகவே விஜய் சேதுபதியை இந்த படத்தில் நடிக்க வைத்திருப்பார்கள் என்ற ஒரு பேச்சும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் விக்ரம் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.