விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. அந்த பாடல் வெளியான அதே நாளில் சிம்பு பாடிய ’டோண்ட் வொர்ரி புள்ளிங்கோ’ என்ற பாடலும் வெளியானது. இந்த இரண்டு பாடல்களும் சமூக வலைதளங்களில் மிக பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய் பாடிய குட்டிக்கதை பாடலை சிம்பு பாராட்டியுள்ளார். அவர் இது குறித்து கூறிய போது குழந்தைகளையும் ரசிகர்களையும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் கவர்ந்து உள்ளதாகவும் விஜய்யின் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விஜய் ரசிகர்கள் சிம்புவுக்கு நன்றி தெரிவித்ததோடு, சிம்பு பாடிய பாடலும் சூப்பராக இருப்பதாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கு சிம்பு ரசிகர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களும் சிம்பு ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் மாறிமாறி பாராட்டு தெரிவித்துக் கொள்வது ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…