
தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, மற்றும் கேரள, கர்நாடக, தெலுங்கு மாநிலங்களில் உரிமை ஆகியவை விற்பனை ஆகி விட்ட நிலையில் தற்போது தமிழக ரிலீஸ் உரிமை குறித்த தகவல் வெளிவந்துள்ளது
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது
‘மாஸ்டர்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற லலித் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தளபதியின் ‘மாஸ்டர்’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே லலித்குமார் தான் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks you vijay sir and Britto Sir for giving this opportunity . pic.twitter.com/qLnw4YicWb
— Lalitkumar (@Lalit_SevenScr) January 6, 2020