ஒரு இன்ச் கூட நகராத விக்ரம் படம்… வெறுப்பில் வேறு படத்துக்கு சென்ற இயக்குனர்!

Published on: July 22, 2020
---Advertisement---

8afe0e12202c143d1c9866bd8586e0c7

விக்ரம் நடிக்க பிரம்மாண்டமாக உருவாக இருந்த மஹாவீர் கர்ணா திரைப்படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read

விக்ரம், மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா என்ற திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக இருந்தது. கர்ணன் வேடம் ஏற்று விக்ரம் நடிக்க, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தியா முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது. விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து இப்போது படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதனால் விக்ரம் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காத்திருந்து பார்த்த இயக்குனர் விமலும் இப்போது வேறு படத்தை இயக்க சென்றுவிட்டார். அதனால் கர்ணா திரைப்படம் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதே சந்தேகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலிஸாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment