மிஷ்கின் படத்தில் நடிக்கவிருந்த விக்ரம்… இப்ப வரைக்கும் நடக்காம போச்சே!…

Published on: May 27, 2021
---Advertisement---

fa5b91d63d5cde5067de269635c9d961-1

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி முதல் சைக்கோ வரை தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் இயக்குனர் மிஷ்கின். இவரின் முதல் திரைப்படமே செம ஹிட். அதன்பின் அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில், சித்திரம் பேசுதடி படத்திற்கு முன்பே அவரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க ஆசைப்படது தற்போது தெரியவந்துள்ளது. தயாரிப்பாளர் தாணு இந்த தகவலை தெரிவித்துள்ளார். விக்ரமும், அவரும் மிஷ்கினிடம் கதை கேட்டுள்ளனர். மிஷ்கின் கூறிய கதை விக்ரமுக்கு பிடித்திருந்தது. இப்படம் பெரிய செலவு இல்லை. எனக்கு லாபம்தான் வரும். ஆனால், நான் கமர்ஷியலான கதையை எதிர்பார்க்கிறேன் என விக்ரமிடம் தானு கூறினாராம். மிஷ்கின் கூறிய அந்த கதை ‘நந்தலாலா’. பின்னர் அப்படத்தில் மிஷ்கினே நடித்தார்.

அதன்பின்னரும் விக்ரமும், மிஷ்கினும் ஒரு படத்தில் இணைய இருந்தனர். ஆனால், சுசி கணேசன் கூறிய ‘கந்தசாமி’ படக்கதை தாணுவுக்கும், விக்ரமுக்கும் பிடித்திருந்ததால் அதுவும் நடக்கவில்லை. தற்போது வரை மிஷ்கினும், விக்ரமும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment