More

வில்லன்கள் ஐ போனை பயன்படுத்தக் கூடாதாம் – ரகசியத்தை கசியவிட்ட இயக்குனர் !

ஹாலிவுட் படங்களில் வில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தக் கூடாது என ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

நைவ்ஸ் அவுட் எனும் திரைப்படத்தின் இயக்குனர் ரியான் ஜான்சன் ஆப்பிள் நிறுவனம் சினிமாக்களில் இடம்பெறும் வில்லன் கதாபாத்திரங்கள் தங்கள் ஐபோனை பயன்படுத்த தடை விதித்துள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது சமீபத்திய படமான நைவ்ஸ் அவுட் (ஆஸ்கரில் கவனம் ஈர்த்த) படத்தின் படத்தைப் பற்றி பேசும்போது இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஆப்பிள் நிறுவனம் எல்லா தயாரிப்பு நிறுவனங்களோடும் இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளது. நீங்கள் ஏதாவது த்ரில்லர் படத்த்தை எடுத்தால் அதில் உங்களால் ஐபோனை பயன்படுத்த முடியாது.

Published by
adminram

Recent Posts