நடிகர் விமலுக்கு 5 கோடி கடன் : புலம்பும் தயாரிப்பாளர்

by adminram |

e41a879a522b68c526d1530928f4400f

நடிகர் விமல் தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் மினிமம் பட்ஜெட் ஹீரோக்களில் முக்கியமானவர் . விஜய் நடித்துள்ள கில்லி, குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்பட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டர்.

பின்னர், இவர் பல குறைந்த நிதிநிலை தயாரிப்பில் உருவான படங்களான களவாணி,வகை சூடவா, கலகலப்பு, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இவரின் "கேடி பில்லா கில்லாடி ரெங்கா" படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் வாராவாரம் நடிகர் விமல் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனா நிலையில், நடிகர் விமல் சரியான கதைகளை தேர்ந்தேடுக்க தவறியதால் அவரின் படங்கள் வெற்றி பெற தவறின. இதை தொடர்ந்து நடிகர் விமலின் படவாய்ப்புகள் குறைந்தன.

e5ca0f152375051ab1d9c148122c5f08-2

இதனால் நடிகர் விமல் சொந்தமாக படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி, "மன்னர் வகையறா" என்ற திரைப்படத்தை வெளியிட்டார். ஆனால் நடிகர் விமல் எதிர்பார்த்த அளவு படம் வெற்றிபெறவில்லை. இதனால் "மன்னர் வகையறா" திரைப்படத்தின் பைனான்சியர் மற்றும் நடிகர் விமல் இடையே பிரச்சனை ஏற்பட்டது .

இது குறித்து பிரபல தயாரிப்பாளரும், "மன்னர் வகையறா" திரைப்பட பைனான்சியரின் நண்பருமான " சிங்காரவேலன்" பின்வருமாறு தெரிவித்தார். நடிகர் விமலுக்கு "மன்னர் வகையறா" திரைப்படத்திற்கு முன்பே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது, இருப்பினும் நடிகர் விமல் தனக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வருவதால் தன்னால் கடனை சுலபமாக அடைக்கமுடியும் என்று நம்பிக்கை கொடுத்து பணம் வாங்கியதாக சிங்காரவேலன் கூறினார்.

மேலும் "மன்னர் வகையறா" திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் விமலின் கடன் ஐந்து கோடிக்குமேல் ஏறிவிட்டதாகவும், இதற்கு காரணம் நடிகர் விமலின் அனுபவம் இன்மையே காரணம் என்றும். நடிகர் விமல் தனது கடனை திருப்பித்தர மறுப்பதால், பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்தில் விசாரணையில் உள்ளதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் கூறினார்.

e7be0923f2ebe93329617755321ca470
Vimal

இது தமிழ் திரைப்பட மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story