விண்டேஜ் ரஜினிகாந்த் – தர்பார் சிறப்புக் காட்சி பார்த்த ரசிகர்கள் கருத்து !

தர்பார் படத்தின் சிறப்புக்காட்சியின் முதல்பாதியை பார்த்த ரசிகர்கள் டிவிட்டர் மற்றும் சமூகவலைதளங்களில் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் இன்று காலை உலகமெங்கும் ரிலிஸாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போன்ற நகரங்களில் அதன் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக படத்தைப் பார்க்க திரையரங்குகளில் கூடி ஆரவாரம் செய்துள்ளனர்.

முதல்பாதி முடிந்துள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இடைவேளைக் காட்சி அட்டகாசமாக இருப்பதாகவும், தர்பாரில் பழைய விண்டேஜ் ரஜினி நமக்குக் கிடைத்திருப்பதாகவும் ரசிகர்ல்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவர்கள் எல்லாம் ரஜினி ரசிகர்கள் என்பதால், முழுப்படமும் முடிந்து பொதுவான ஆடியன்ஸ் படம் பார்த்து கருத்து சொன்னால்தான் உண்மையாக படம் எப்படி இருக்கிறது என்பது தெரிய வரும்.

Published by
adminram