தங்கை முறை பெண்ணிடம் அத்துமீறல்… கணவனை போட்டுத்தள்ளிய மனைவி !

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் தனது கணவனைக் கொன்றதற்கான காரணத்தை மனைவி போலிஸாரிடம் சொல்லியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் குடிநீர் திறந்துவிடும் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் வீட்டுக்கே செல்லாமல், குடித்துவிட்டு ஆங்காங்கே விழுந்து கிடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தாருக்கு ரமேஷ் மீது வருத்தம் இருந்துள்ளது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக குடிபோதையில் ரமேஷ் தனது மனைவி நித்யாவின் தம்பி மனைவியிடம் அத்துமீற முயற்சி செய்துள்ளார். தங்கை முறையுள்ள பெண்ணிடம் இப்படி நடந்துகொண்டதால் எல்லோருக்கும் அவர் மீது வெறுப்பு அதிகமாகியுள்ளது. இதனால் அவரது மனைவி நித்யா மற்றும் அவரது தம்பி அரவிந்தன் ஆகியோர் இணைந்து ரமேஷ் குமாரை கடந்த 4 ஆம் தேதி தலையில் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram