என்ன கிள்ளுனது யாரு? ; டாக்டரை முறைக்கும் பிறந்த குழந்தை : வைரல் புகைப்படம்

பிரேசிலில் புதிதாக பிறந்த ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டின் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டயானே டிஜீசஸ் பார்போசா என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. பிறந்ததில் சிறிது நேரம் அந்த குழந்தை அழாமல் இருந்துள்ளது.

அதனால் குழந்தையை அழவைப்பதற்காக மருத்துவர்கள் அதை கிள்ளியுள்ளனர். அதற்கும் அழாத குழந்தை புருவங்களை உயர்த்தி கோபமாக முறைப்பது போல பார்த்துள்ளது. இந்நிலையில் குழந்தையைப் புகைப்படம் எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர் அதை உடனடியாக புகைப்படம் எடுத்துள்ளார்.

இதை அந்த குழந்தையின் தாயார் சமூகவலைதளங்களில் பகிர இப்போது உலகம் முழுவதும் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Published by
adminram