சுற்றுலா பயணிகளிடம் 8 மொழிகளில் பேசி அசத்தும் சிறுவன் – வைரல் வீடியோ

இந்தியாவிற்கு பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இந்தியாவில் உள்ள சிறப்பு மிக்க, வரலாற்று முக்கியத்துவம் உள்ள மற்றும் இந்தியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் பல இடங்களை அவர்கள் சுற்றிப்பார்க்கிறார்கள். அப்படி பார்க்கும் போது அந்த குறிப்பிட்ட இடத்தை பற்றி அவர்களுக்கு விவரித்து செல்லும் பயண வழிகாட்டி (Tourist guide) முக்கிய பங்கை வகிக்கிறார்.

இந்நிலையில், வட மாநிலம் ஒன்றில் அந்த வேலையை செய்யும் சிறுவன் ஒருவர் எகிப்து, ஸ்பானிஷ், ஆங்கிலம் என பல மொழிகளிலும் பேசி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பல இடங்களில் இந்த சிறுவன் வழிகாட்டியாக பணிபுரிந்துள்ளதாக அந்த வீடியோவில் கூறுகிறான்.

Published by
adminram