
விஷால் இயக்கத்தில் தான் உருவாக்கிய ஆக்ஷன் திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து தனது வழக்கமான கதைக்களத்துக்குத் திரும்பியுள்ளார் சுந்தர் சி.
சுந்தர் சி எப்போதும் கொஞ்சம் கிளாமர், நிறைய காமெடி, கொஞ்சூண்டு ஆக்ஷன் என மசாலா படமாக எடுப்பவர். அதனால் அவர் படங்கள் எப்போதும் மினிமம் கியாரண்டியாக யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லாமல் காப்பாற்றுபவை.
ஆனால் கடைசியாக அவர் இயக்கிய ஆக்ஷன் திரைப்படம் முற்றிலும் ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. மருந்துக்குக் கூட காமெடி இல்லாமல் இருந்தது. இதனால் அந்த படத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாந்தனர். படமும் படுதோல்வி அடைந்தது.
இதனால் மனமுடைந்த சுந்தர் சி ஆச்ஷன் ரூட் போதும் என முடிவு செய்து இப்போது தனது கதைக்களனான பேய்க் காமெடிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அரண்மனை 1, அரண்மனை 2 வரிசையில் இப்போது அரண்மனை 3 எடுக்கும் முனைப்பில் இருக்கிறார். இந்த படத்தில் ஆர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.