நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக்....

by adminram |

1d1e80d76c6a9b0a28664bbf13e851fa-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் தான் நடிகர் விஷால். தற்போது இவரது நடிப்பில் எனிமி படம் முற்றிலும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. எனிமி படத்தில் விஷாலுடன் இணைந்து நடிகர் ஆர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து துப்பறிவாளன் 2, து.பா சரவணன் இயக்கத்தில் ஒரு புதிய படம் உள்ளிட்ட படங்களில் விஷால் நடித்து வருகிறார்.

5cc3b897ba72c2ba4dc745f7313c0997-3
veeram vaagai soodum

இந்நிலையில் து.ப.சரவணன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இப்படத்தின் டைட்டில் வீரமே வாகை சூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி நடிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முற்றிலும் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. அதனை குறிக்கும் விதமாக பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் கையில் கட்டையுடன் சிலரை அடித்து துவம்சம் செய்தது போல் உள்ளது.

7ab18278a9adf9e223bcfbe2a0d38989-2-2
Dimple Hayati - cinereporters

எனவே இப்படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஷன் படங்கள் என்றாலே அது விஷால் படம்தான் என சொல்லும் அளவிற்கு விஷால் ஆக்சன் காட்சிகளில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். எனவே இப்படமும் அந்த வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

99ea822d92d22a7ec29dc284a1884b31
veeram vaagai soodum- cinereporters
Next Story