விஷ்ணுவிஷாலின் முதல் இருமொழி படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகுபலி வில்லன் ராணா டகுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘காடன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், ஜோயா ஹூசைன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

பிரபுசாலமன் இயக்கியுள்ள இந்த படம் கும்கி ஸ்டைலில் யானைப்பகன் குறித்த படம் என்பதால் இந்த படம் கும்கி படத்தின் இரண்டாம் பாகம் என கருதப்படுகிறது. யானைப்பாகன் மாறன் என்ற கேரக்டரில் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடித்திருப்பதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் உண்மையாகவே யானை பாகன்களுடன் பயிற்சி பெற்றதாகவும் நிஜ யானையுடன் துணிச்சலாக விஷ்ணுவிஷால் நடித்துள்ளதாககவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளது. இது குறித்து விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது என்னுடைய முதல் தமிழ் தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தை நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். ஈராஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram