More

கர்ணன் படம் சூப்பர் ஹிட்….. தன் ஸ்டைலில் வாழ்த்திய விவேக்…..

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கிய‘கர்ணன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 

Advertising
Advertising

இந்நிலையில், இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பை கர்ணன் பூர்த்தி செய்துள்ளது. அசுரனை அடுத்து தனுஷுக்கு இப்படம் அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி தனுஷ் ப்ரோ?!?! கர்ணன் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

அதாவது, தனுஷுடன் விவேக் நடித்த படிக்காதவன் படத்தில் பேசிய தான் பேசிய வசனத்தை கொஞ்சம் மாற்றி தனுஷை விவேக் வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Published by
adminram

Recent Posts