சன் மியூசிக் சேனல் துவங்கப்பட்ட காலத்தில் அதில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன். அதோடு, சினிமா நிகழ்ச்சி, வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சி தொகுப்பாளர் என ரசிகர்களிடம் நெருக்கமானவர். சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். இப்போதுள்ள தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர். ஆனந்த கண்ணன் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மரணமடைந்தார். ஆனந்த கண்ணனின் மறைவுக்கு டிவி பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சிறந்த நண்பன், சிறந்த மனிதன் இப்போது இல்லை. அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்’ என பதிவிட்டுள்ளார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…