
சின்னதிரையில் வி.ஜே.வாக ரசிகர்களிடம் நெருக்கமானவர் அர்ச்சனா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெட்டிசன்களின் அதிருப்தியை பெற்றார். ஆனால், தன்னைப்பற்றி வரும் நெகட்டிவ் கமெண்டுகளை பற்றி கவலைப்படாமல் தனது வேலையை செய்து வருகிறார்.
சமீபத்தில் அர்ச்சனாவுக்கு மூளையில் CSF லீக் எனப்படும் பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டது. எனவ்ஏ, அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அவரின் உடல் நிலை பற்றி அவரின் மகள் சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து தற்போது அர்ச்சனா வீடு திரும்பியுள்ளார். அதன்பின் தனது யுடியூப்பில் தனது உடல் நிலை குறித்து அவர் பேசியுள்ளார். அதில், அவரின் குரலே மாறியிருப்பது கண்டு ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். மேலும், தான் மறு ஜென்மம் எடுத்து வந்திருப்பதாகவும் அதற்கு ரசிகர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைவருமே காரணம் என நெகிழ்சியுடன் பேசி நன்றி தெரிவித்துள்ளார்.





