பொங்கலுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் வெளியானது. இயக்குனர் முருகதாஸ் என்பதாலும், பல வருடங்களுக்கு பின் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் பொதுவான சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.
லாஜிக் மீறல்களும், பலவீமான திரைக்கதை மற்றும் வில்லனும் தர்பார் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், வேறு படங்கள் இல்லாததால் சினிமா ரசிகர்கள் திரையரங்கில் இப்படத்தை பார்த்ததால் ஓரளவுக்கு வசூல் அதிகரித்தது. அதேபோல், தர்பார் வெளியாகி ஒரு வாரத்திற்கு பின் அதாவது கடந்த 15ம் தேதி தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வெளியானது.
தமிழில் வெளியான சில படங்களின் தாக்கத்தில் இப்படம் இருப்பதாக விமர்சனம் எழுந்ததால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது. தற்போது தர்பார் மற்றும் பட்டாஸ் இரண்டு படங்கள் ஓடும் தியேட்டர்கள் காலியாவே இருக்கிறது. 10 பேர் கூட முன்பதிவு செய்வதில்லை என வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தர்பார் படமாவது லாபக்கணக்கில் வந்துவிடும், ஆனால், பட்டாஸ் தோல்விப் படமாகவே அமையும் என திரையுலகில் பேசி வருகின்றனர்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…