வன்னியர் சங்க அறக்கட்டளையின் பெயர் இப்போது ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
27 குழுக்களாக செயல்பட்டு வந்த வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் கீழ் கொண்டுவந்தார். அதன்பின் வன்னிய இளைஞர்களின் கல்விக்காக வன்னியர் சங்க அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அறக்கட்டளையின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி என சொல்லப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் பொறியியல் கல்லூர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் வன்னியர் சங்க அறக்கட்டளை வகுப்புகளில் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது ஏற்கனவே அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிக்கு ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 45…
VijayTV: விஜய்…
விடுதலை 2…
Viduthalai part2:…
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…