சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த பொங்கல் திருநாளில் சோலோவாக ரிலீஸ் ஆகி நான்கே நாட்களில் ரூபாய் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஒரு சில விநியோகிஸ்தரகள் ரஜினிகாந்த் வீட்டின் முன் கூடி, நஷ்ட ஈடு கேட்பதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஒரு ஊடகத்தில் கூட எந்த ஏரியாவின் வினியோகஸ்தர் வந்தார்? எவ்வளவு நஷ்டம் என்று கூறினார்? என்பது குறித்த தகவல் பதிவு செய்யப்படவில்லை
ரஜினி வீட்டின் முன் யாரோ நான்கு பேர் கூடியதை புகைப்படம் எடுத்து உடனே அவர்கள் நஷ்ட ஈடு கேட்டு வந்தவர்கள் என்று கூறி பரபரப்பை ஊடகங்கள் ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதேபோல் லிங்கா படத்தின் போதும் நஷ்ட ஈடு கேட்டு அவர்களை விசாரித்த போது அவர்கள் தியேட்டரில் முறுக்கு விற்பவர்கள் என்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நஷ்ட ஈடு கேட்டு வருபவர்கள் ஆபிஸ் ரூமுக்கு வரவும் என்று முக அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிலடி டுவிட்டை பதிவு செய்துள்ளார். பொய்யான கணக்குகள் காண்பித்து நஷ்ட ஈடு வருபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதே முக அழகிரியின் இந்த டுவீட்டில் ஒளிந்திருக்கும் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…
சென்னை வானகரத்தில்…