More

பார்த்திபன் படத்தில் நடிக்க வேண்டுமா? அவரே விடுத்துள்ள அழைப்பு!

நடிகர் மற்றும் பார்த்திபன் உருவாக்கும் படத்துக்காக நடிகர் நடிகைகள் தேர்வுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் எப்போதுமே வித்தியாசங்களுக்கு பெயர் போனவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததை அடுத்து புதிய படத்தை உருவாக்கும் முனைப்பில்  உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக தன்னைப் போலவே உருவம் கொண்டுள்ள 10 வயது முதல் 50 வயது உள்ள நடிகர்களை அவர் தேடி வருகிறார்.

இது சம்மந்தமான டிவிட்டில் ‘நண்பர்களே! அடுத்த படத்தில் நடிக்க என் உருவ அமைப்பை ஒத்த 10 to 50 வயதில் சற்றே அனுபவமுள்ள நடிகர்கள் தேவை!புகைப்படத்துடன் ஒரு நிமிட வீடியோவில் திறமையை பதிவு செய்து அனுப்பவும்.Please விருப்பமுள்ள அனைவரும் முயலாமல், பொருத்தமுள்ளவர்கள் அனுகவும். bioscopefilmframers.artists@gmail.comஎனத் தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts