ஐஸ்வர்யாவுடன் குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் வீடியோ!!
முன்னாள் உலக அழகியும் நடிகையான ஐஸ்வர்யாராய் தற்போது பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார் ஐஸ்வர்யா. இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு மகள் இருக்கிறார், குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் இடை வேளை கொடுதிருந்த ஐஸ்வர்யா தற்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இவர் கடைசி ரஜினி நடித்த எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கியிருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அன்றைய நாளில் இப்படம்தான் வசூலிலும் நம்பர் ஒன் ஆக திகழ்ந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக வார்னர் அவ்வப்போது இந்திய சினிமா பாடல்களுக்கு நடனமாடி அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிவந்தார். அந்தவகையில் தற்போது எந்திரன் படத்தில் இடம்பெற்ற கிளிமாஞ்சாரோ என்ற பாடலில் ரஜினியின் முகத்திற்கு பதிலாக இவரது முகத்தை பொருத்தி ஒரு வீடியோவை தனது இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஆஸ்திரேலிய சூப்பர் ஸ்டார் வார்னர் காந்த் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.