’தர்பார்’ படத்தில் அஜித் கிண்டலடிக்கப்பட்டாரா? பரபரப்பு தகவல்

கடந்த ஆண்டு இதே பொங்கல் தினத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் வெளியானது. இரண்டு படங்களின் டிரைலர் வெளியான போது ’பேட்ட’ படத்தில் ‘சத்தியமா சொல்ரேன், அடிச்சு அண்டர்வேரோட ஓடவிட்ருவேன்’ என்று கூறியிருப்பார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் விஸ்வாசம் படத்தில் ‘” பேரு தூக்கு துரை தேனி மாவட்டம், ஊரு கொடுவிலார் பட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பெரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா ” என்று மாஸ் வசனம் ஒன்று வரும்.

இந்த வசனத்திற்கு பதிலடி கொடுக்க அப்போது பேட்ட படகுழுவினர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போனது. இந்த வாய்ப்பை பேட்ட பட குழுவினர் மிஸ் செய்த நிலையில் தற்போது தர்பார் படக்குழுவினர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ‘உன் பேரு அட்ரஸ் எல்லாம் தெரிஞ்சு நான் என்ன கேபிள் கனெக்சனா கொடுக்க போறேன் என்ற ஒரு வசனத்தை வைத்து அஜித்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கிண்டலடித்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியை கலாய்த்த விஸ்வாசம் படக்குழுவினருக்கு ரஜினி படக்குழுவினர் கிண்டலடிப்பதெல்லாம் அதெல்லாம் சரிதான் ஆனால் அஜீத்தின் தீனா படத்தில் அறிமுகமான ஏஆர் முருகதாஸ் அவருக்கு எதிராக இப்படி ஒரு வசனத்தை வைக்கலாமா? என்று அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Published by
adminram