More

58 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு த்ரில்லர் படமா…?!

ஸ்ரீதர் இயக்கத்தில் 1963ல் வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. கல்யாண்குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் உதவி இயக்குனர் யார் தெரியுமா? ஸ்ரீதரின் தம்பி சி.வி.ராஜேந்திரன் தான். படத்தின் மையக்கருவே மறுபிறப்பு தான். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்தனர். பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. இப்போது கேட்டாலும் நெஞ்சில் நீங்காத ராகமாக ஒலிக்கும். கேட்டுத் தான் பாருங்களேன். 

நெஞ்சம் மறப்பதில்லை, அழகுக்கும் மலருக்கும், ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. பாடல்களை கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியுள்ளனர். அழகுக்கும் மலருக்கும், காடு மேலை மேடு கண்டா, முந்தானை பந்தாட, நெஞ்சம் மறப்பதில்லை, தேனடி மீனடி ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இது ஒரு த்ரில்லர் படம். 1963லேயே இப்படி ஒரு வித்தியாசமான கதைகளத்துடன் வெளியான படம் என்றால் அது ரொம்பவே பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். 

கல்யாணகுமார் ஒரு ஊருக்குச் செல்கிறார். இந்த ஊரை நான் ஏற்கனவே பார்த்திருக்கேன் என்கிறார். ஒரு வீட்டில் குளிக்கச் செல்கிறார். அங்கு ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அன்று இரவில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது. இதுகுறித்து அவரது நண்பரிடம் கேட்கிறார். இந்தப் பெண் ஒரு அரண்மனையைப் பார்த்ததில் இருந்து இப்படி மனநலம் சரியில்லாமல் ஆகிவிட்டாள். 
அவள் எனது தங்கை தான் என்கிறார். தொடர்ந்து கல்யாண்குமார் இரவில் தனியாக ஒரு பாழடைந்த அரண்மனைக்குச் செல்கிறார். இரவில் அலறி பயமுறுத்திய அந்த பெண் யார் என அறியும் ஆவலில் அந்த பெண்ணைத் தேடிச் செல்கிறார்.  
அங்கு தனது போட்டோவும், நம்பியாரின் போட்டோவும் உள்ளது. அப்போது ப்ளாஷ்பேக் செல்கிறது. கல்யாண்குமார் தன்னை விட கீழ்ஜாதி பெண்ணை காதலிக்கிறார். இது நம்பியாருக்கு பிடிக்கவில்லை.

இவர்களைப் பிரிக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண்ணை வேறொருவருடன் கல்யாணம் பண்ணி வைக்க நம்பியார் முயற்சிக்கிறார். இது கல்யாண்குமாருக்குப் பிடிக்கவில்லை. அவர் அந்தப் பெண்ணைக் கூட்டிச் செல்கிறார். உடனே நம்பியார் அந்தப் பெண்ணை சுட்டுக் கொல்கிறார். 

Advertising
Advertising

அடுத்த பிறவியிலும் இந்தப் பழிவாங்கும் படலம் தொடர்கிறது. இந்த ஜென்மத்திலும் கல்யாண்குமார், அந்தப் பெண்ணைக் காதலிக்கிறார். அப்போதும் நம்பியார் வயதான தோற்றத்தில் மறுபிறவி எடுத்து அந்தக் காதலுக்கு இடையூறு செய்கிறார். இப்போதாவது இந்தக் காதல் வெற்றி பெற்றதா என்பதைத் தான் வெள்ளித்திரை சொல்கிறது. 

கலைப்படமாக இருந்தாலும் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டு சிறிதும் ஆர்வம் குறையாமல் இருக்கச் செய்தது இந்த படம். உண்மையிலேயே இந்தப்படம் பார்க்கும் நெஞ்சங்கள் என்றென்றும் மறப்பதில்லை தான்.

இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் செல்வராகவன் வாங்கியுள்ளார். 2021ல் செல்வராகவன் இயக்கத்தில் இதே தலைப்பில் த்ரில்லர் படமாக வெளியானது. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர். 
 

Published by
adminram

Recent Posts