More

சஹாலை சாதிய ரீதியாக இழிவுபடுத்தினாரா யுவ்ராஜ்? சர்ச்சையை அடுத்து வருத்தம்

இந்திய அணியின் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரைப் பற்றி இழிவு செய்யும் விதமாக முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்குக்கு எதிராக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Advertising
Advertising

முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்தியாவின் தற்போதையை துணைக் கேப்டனுமான ரோஹித் ஷர்மாவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலமாக உரையாடினர். அப்போது பல விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசினர். அப்போது குல்தீப் யாதவ் மற்றும் யஷ்வேந்திர சஹால் ஆகியோரைப் பற்றி பேசும்போது யுவ்ராஜ் பேசிய சில வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை இழிவு செய்யும் விதமாக உள்ளதாக சர்ச்சைக் கிளம்பியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக யுவ்ராஜ் ‘ஒருபோதும் நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலின பாகுபாடுடன் பழகியதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் என்னுடைய நண்பரிடம்(ரோஹித் ஷர்மாவிடம்) பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது’ எனக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts