கன்னட நடிகர் மற்றும் இயக்குனருமான ரிசப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த 2ம் தேதி வெளியான காந்தாரா 2 திரைப்படம் கன்னட மொழியில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. காந்தாரா திரைப்படத்தின் முதல் பாகம் 3 வருடங்களுக்கு முன்பு அதாவது 2022 ஆம் வருடம் வெளியாகி அசத்தலான வெற்றியை பெற்றது. வெறும் 16 கோடி செலவில் உருவான அந்த படம் 400 கோடி வரை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது.
தற்போது அப்படத்தை தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் காந்தாரா 2 படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படம் இதுவரை 550 கோடி வசூலை தாண்டி விட்டது எப்படியும் Kantara Chapter 1 திரைப்படம் 700 முதல் 800 கோடி வரை இப்படம் வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது.
பல நூறு வருடங்களுக்கு முன்பு காடுகளில் வசித்த மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் வணங்கிய பஞ்சுருளி தெய்வம், அதன் சக்தி ஆகியவற்றை இந்த படத்தில் பேசியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இந்த படத்தில் பஞ்சுருளி தெய்வத்தை அவர் காட்டிய விதம், அது தொடர்பான VFX காட்சிகள் ரசிகர்களிடம் கூஸ்பம்ஸை ஏற்படுத்தியுள்ளது. அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. கன்னட திரை உலகமே காந்தாரா 2 படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறது. ரிஷப் ஷெட்டிக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
அதேநேரம் அந்த படத்தில் ஒரு காட்சியில் மக்கள் எல்லாம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு காட்சியில் ஓரத்தில் ஒரு வாட்டர் கேன் வைத்திருப்பது ரசிகர்கள் கண்களில் பட்டுவிட்டது. எனவே அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ‘கதை நடப்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்றால் அப்போது வாட்டர் கேன் வந்தது எப்படி?’ என்று பலரும் இந்த போட்டோவை பகிர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள். இயக்குனரான ரிஷப் செட்டியின் ஒரு சின்ன கவனக்குறைவு இந்த ட்ரோலுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…
தமிழ் சினிமாவில்…
நாம் எதேச்சையாக…
ஹெச்.வினோத் இயக்கத்தில்…