ஆந்திராவைக் காப்பாத்திட்டோம்…. தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும் – விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் இருவர் !

by adminram |

cfc4de3424732238cadecd3546cbafe1

நடிகர் விஜய்யை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் அரசியலுக்கு அழைப்பது போல மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததும் அவரை பாதியிலேயே படப்பிடிப்புத் தளத்தில் இருந்து தூக்கி செல்லப்பட்டதும் பெரும் அதிர்வுகளைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இறங்கு முகமாக இருக்கும் பாஜகவுக்கு இது மேலும் சில அடி சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதைக் காரணமாக வைத்து விஜய்யை அரசியலுக்கு வரசொல்லி அவரது ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் விஜய் அருகே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ என்க் கூறுவது போல் அச்சடிக்கப்ப்ட்டுள்ளது. மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Next Story