எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும் – நீதிமன்றத்துக்கு சென்ற ஓரினச்சேர்க்கை தம்பதிகள் !

கேரளாவில் ஓரினச்சேர்க்கை தம்பதிகள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் மத்திய மாநில அரசுகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த நிகேஷ் மற்றும் சோனு என்ற இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் திருமணத்தை அங்கீகரிக்க கோவில்கள் மறுத்துவிட்டன.

இதையடுத்து இவர்கள் இருவரும் நீதிமன்றத்தை நாடினர். ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னிலைப்படுத்தி தங்கள் திருமணம் செல்லும் என அறிவிக்க வேண்டும் என அவர்கள் கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது சம்மந்தமாக பதிலளிக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது..

Published by
adminram