More

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதனை பல மாநிலக் கட்சிகள் எதிர்த்துள்ளன. அதிலும் குறிப்பாக மும்மொழிக் கொள்கையை தமிழகம் முழுவதும் பெருவாரியான கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையைதான் பின்பற்றுவோம் என்றும் தமிழக மக்களின் உணர்வை ஏற்று மத்திய அரசு இந்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து மாநிலங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும்படி பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts