டாக்டரை நீங்க ரிலீஸ் பண்ணலனா நாங்க பண்ணிடுவோம்!.. கறார் காட்டிய சன் டிவி...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் டாக்டர். இப்படத்தை ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியிருந்தார். ஆனால், இப்படம் கடந்த வருடமே முடிந்துவிட்டது. ஆனால், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இப்படம் வெளியாகவில்லை. எனவே, ஓடிடியில் இப்படம் வெளியாகும் என பல முறை செய்திகள் வெளியானது. ஆனால், தியேட்டரில் மட்டுமே டாக்டரை வெளியிடுவோம் என அப்படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்து கூறி வந்தார்.
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஏற்கனவே சன் டிவி வாங்கி விட்டது. ஆனால், படம் இன்னும் வெளியாகவில்லை. தியேட்டரோ அல்லது ஓடிடியோ படம் வெளியான பின்னரே சன் டிவியில் வெளியிட முடியும். ஆனால், தயாரிப்பாளர் தரப்பு படத்தை இழுத்திக்கொண்டே போவதால் சன் டிவி தரப்பு கடுப்பாகி விட்டதாம். வருகிற நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இப்படத்தை சன் டிவியில் வெளியிட முடிவெடுத்துவிட்டோம். எனவே, அதற்கு முன் தியேட்டரோ அல்லது ஓடிடியோ நீங்கள் ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என கறார் காட்டுகிறதாம் சன் டிவி.
எனவே, அக்டோபர் ஆயுத பூஜை வரும் 14ம் தேதி தியேட்டரில் டாக்டரை வெளியிடலாம் என தயாரிப்பாளர் நினைத்தாராம். ஆனால், ஒரு படம் தியேட்டரில் வெளியாகி நான்கு வாரம் கழித்தே ஓடிடியோ அல்லது தொலைக்காட்சியிலோ வெளியிட முடியும் என்பது தியேட்டர் அதிபர்களின் விதிமுறை. எனவே, அக்டோபர் 7ம் தேதி வெளியிடுங்கள் என அழுத்தம் கொடுக்கிறார்களாம் தியேட்டர் தரப்பு. ஆனால், அப்போது வெளியிட்டால் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என்பது சந்தேகமே.
எனவே, என்ன செய்வதென்று என தலை முடியை பிய்த்து வருகிறாராம் டாக்டர் பட தயாரிப்பாளர்.