சத்யராஜ் பொது மேடைகளில் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன் என்ற கேள்விக்கு சித்ரா லட்சுமனன் பதிலளித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்த போது ரஜினியின் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக மாறிய போது அதன் பின்னர் மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் வயதானவுடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய போது கூட ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்தார். அதுமட்டுமில்லாமல் ரஜினியைப் பொது மேடைகளில் வைத்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் சினிமா பிரபலமான சித்ரா லட்சுமணனின் யூட்யூப் சேனலில் ரசிகர் ஒருவர் நடிகர் சத்யராஜ் ஏன் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்று கேட்க அதற்கு சித்ரா லட்சுமனன் ‘அவர்கள் இருவருக்கும் சினிமா சம்மந்தமாக எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் 1996 லிருந்து ரஜினி அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு தற்போது வரை அதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளியிடாமல் இருக்கிறார். இதை ஏமாற்று வேலை என நினைக்கிறார் சத்யராஜ். அதுமட்டுமில்லாமல் கர்நாடகரான ரஜினி அரசியலுக்கு வருவதையும் சத்யராஜ் விரும்பவில்லை போல தெரிகிறது’ எனக் கூறியுள்ளார்.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…