Categories: latest news

இந்தியன் தாத்தாவிடம் சித்தார்த் கேட்ட கேள்வி… அங்க தான் நிக்குது படம்… பயில்வான் ரிவியூ

இந்தியன் 2 படம் ரொம்ப எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தைத் தந்து இருக்கிறது என்று கலவையான விமர்சனங்கள் வருகிறது. இருந்தாலும் இந்தியன் 3 ல் தான் படத்தின் மொத்த கருத்தும் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே இந்தியன் 2 படம் வந்துள்ளதாம். படத்தைப் பற்றி பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

ஒவ்வொரு தனிநபரும் திருந்தும்போதும், தன் வீட்டைச் சுத்தம் செய்யும்போதும் நாடு நலம்பெறும் என்ற ஒற்றை வரி தான் கதை. விஜய் மல்லையாவில் கதை ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் திருந்த வேண்டும். வீட்டைத் திருத்த வேண்டும் என்று சொல்கிறது படம். பிரபல யூடியூபர்களாக வலம் வருகின்றனர் சித்தார்த் குழுவினர்.

கமல் மட்டும் ஹாலிவுட்டில் பிறந்தால் அவரை அந்த ஹாலிவுட்டே கொண்டாடியிருக்கும். எந்த ஒப்பனையாக இருந்தாலும் அழகாகப் பொருந்துகிறது. எத்தனை பேர் வந்தாலும் அந்த வர்மக்கலையால் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார். சண்டைக்காட்சிகள் எல்லாம் வேற ரகம். சமுத்திரக்கனி பிரமாதமாக நடித்துள்ளார். அப்பா, மகன் பாசத்தை பல நேரங்களில் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிரியா பவானி சங்கர் வரும் காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஜோடி கிடையாது. ரகுல் ப்ரீத்தி சிங் சித்தார்த்தை லவ் பண்ணுகிறார். ‘நீ மட்டும் திருந்திட்டா இந்த உலகம் திருந்திடுமோ’ என கேள்வி கேட்கிறார்.

கடைசியில் சித்தார்த் கேட்கும் கேள்வியில் எழுந்து உட்காரச் செய்கிறது. ‘வீட்டில் நிம்மதி இல்லை. அப்படி இருக்கும் போது வீட்டைத் திருத்துவது எப்படி’ன்னு இந்தியன் தாத்தாவிடம் கேட்கிறார். ஒரு நல்ல நகைச்சுவை நடிகனை இழந்து விட்டோமே என யோசிக்கும் வகையில் விவேக் நம்மை சிரிக்க வைக்கிறார்.அப்படித்தான் மனோபாலாவும்.

படத்துல செட்டிங் எல்லாமே சூப்பர். ரவிவர்மனின் ஒளிப்பதிவு ஓவியத்தைப் போலவே தீட்டியுள்ளார். அனிருத் இசை ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைல். காசு வாங்கி ஓட்டுப்போடுவதால் நாம் நல்லவங்களைத் தேர்ந்தெடுக்கவே முடியாது. அதிகாரத்திற்கு வந்ததும் எல்லாருமே தவறு செய்யத் தான் செய்வார். ஊழலை ஒழிக்க முடியாது என்பது தான் படத்தின் கருத்து.

ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் இல்லை. இந்தியன் 2ஐ விட இந்தியன் 3 பிரமாதமா இருக்கு. அடுத்த பாகம் இளைஞர் கமல், எஸ்.ஜே.சூர்யாவைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago