லைகாவோட சரிவுக்கு என்ன தான் காரணம்? ஒண்ணா இல்லை இரண்டா எதைச் சொல்ல..?
லால் சலாம், இந்தியன் 2, சந்திரமுகி 2ன்னு பல படங்கள் தொடர்ந்து லைகா நிறுவனத்துக்கு தோல்வியையேத் தந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று ஆங்கர் ஒருவர் வலைப்பேச்சு பிஸ்மியிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார்னு பார்ப்போமா...
லைகா நிறுவனம் தொடர்ந்து அகலக் கால் வைக்கறதால தான் இந்த மாதிரி சரிவு. நீங்க எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி. உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி. ஒரு விஷயத்தை அழகா திட்டமிட்டு ஒன் பை ஒன்னா செஞ்சிக்கிட்டு வரும்போது உங்களோட மொத்த கவனமும் இப்போ என்ன புராஜெக்ட் பண்றீங்களோ அதுல குவிஞ்சிக்கிட்டு வரும்.
ஒரே நேரத்துல 10 புராஜெக்ட் பண்ணினீங்கன்னா கவனச்சிதறல் ஏற்பட்டு எந்த படத்துலயுமே கவனக்குவிப்பு இருக்காது. கிட்டத்தட்ட லைகாவோட சரிவுக்கு அதான் காரணம்னு நினைக்கிறேன்.
ஒரு பக்கம் விடாமுயற்சி, ஒரு பக்கம் இந்தியன் 2, இன்னொரு பக்கம் வேட்டையன், இன்னொரு பக்கம் விஜய் மகன் சஞ்சய் இயக்குற படம்னு ஒரே நேரத்துல பல படங்கள டீல் பண்ணும்போது இப்படி ஒரு சிக்கல் வரத்தான் செய்யும்.
இன்னைக்கு லெவல்ல ஒரு நாள் படப்பிடிப்பு செலவுங்கறது 10 லட்சம், 15 லட்சம்னு போய்க்கிட்டு இருக்கு. அதே நேரத்துல அஜித், விஜய், கமல் ஆகியோரை வைத்து எல்லாம் படம் பண்ணும்போது தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 1 கோடி ரூபாயை எடுத்து வைக்கணும். இன்னைக்குப் பார்க்கும்போது லைகாவால லண்டன்ல உள்ள பணத்தை இங்கக் கொண்டு வர முடியல.
இங்குள்ள லோக்கல் பைனான்சியர்கிட்ட இவங்களால கடன் வாங்க முடியல. அந்;த மாதிரியான நெருக்கடியான சூழல் இருக்கும்போது எப்படி இவ்வளவு படங்களை ஒரே நேரத்துல கொண்டு வருவீங்க?
இதெல்லாம் தான் லைகாவோட சரிவுக்குக் காரணம். விடாமுயற்சி பிரேக் டவுன்கற ஆங்கிலப் படத்தோட தழுவல். கமர்ஷியலா வெற்றிப்பெற நிறைய வாய்ப்புகள் இருக்கு. இந்தியன் 2வை எல்லாரும் மாதிரி லைகாவும் நம்புனது. ஆனா அதுவும் பொய்த்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.