விஜய்சேதுபதிக்கும் சுருதிஹாசனுக்கும் லடாய்..? அந்தப் படத்துல இருந்து அதான் விலகலா?

by ராம் சுதன் |

மிஷ்கின் இயக்கம் என்றாலே அது ரொம்பவே வித்தியாசமான படமாகத் தான் இருக்கும். அவரது முந்தையப் படங்களே அதற்கு சாட்சி. அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, முகமூடி, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா படங்களைப் பார்த்தால் தெரியும். தற்போது டிரெய்ன் என்று விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். இந்தப் படத்திற்காக நடிகை சுருதிஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார். இது ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டிரெய்ன் படத்துல சுருதிஹாசனோடு ஒரு பாடல் குறித்துப் பேசியிருந்தாங்க. இந்தப் பாடல் இப்போது ஒரு சர்ச்சையாக இருக்கு. லாபம் படத்துல விஜய் சேதுபதியோட சுருதிஹாசன் நடிக்கறதா இருந்தது. அப்புறம் பின்வாங்கிட்டாங்க. அது கொரோனா காலகட்டம். எல்லாருமே ரொம்ப பாதுகாப்பா இருக்க வேண்டிய சூழலில் விஜய்சேதுபதி ரசிகர்களிடம் நெருங்கிப் பழகுறாரு. முத்தம் கொடுக்கிறார். கட்டிப்பிடிக்கிறார்.

இதை அவரிடம் சுருதிஹாசன் சொன்னபோது அவர் ஏத்துக்கல. இந்த முரண்பாடு தான் அவர் அந்தப் படத்தில் நடிக்காததற்குக் காரணமாக இருந்ததா என பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

அந்த நேரத்தில் கொரோனா காலகட்டமாக இருந்தது. அப்போது தன்னைப் பாதுகாத்துக்கிட்டு இருந்தாங்க. விஜய்சேதுபதி எல்லாருடனும் நல்லா பழகுற ஒரு கேரக்டர். முக்கியமா ரசிகர்களை எல்லாம் முத்தம் கொடுப்பார். அதுவந்து இவங்களுக்குச் சின்னதா ஒரு நெருடலைக் கொடுத்துச்சு.

'யாரோ முகம் தெரியாத ஒரு கூட்டத்துல இவ்ளோ குளோஸா இருந்துட்டு நம்ம கிட்ட நெருங்கி நடிக்கும்போது நமக்கு கோவிட் தொற்றிடுமோ'ன்னு ஒரு பயம். அதுக்கு அவர் நாசூக்கா சுட்டிக்காட்டிருக்காங்க. அதை இவரு அலட்சியம் பண்ணிட்டாரு. 'இப்படிப்பட்டவரோடு நாம எப்படி நடிக்க முடியும்? எல்லாத்துக்கும் மேல உயிர் தான முக்கியம்...'

அதனால தான் அவங்க அப்போ நடிக்கல. இப்போ விஜய்சேதுபதியோட டிரெய்ன் படத்துல பாடியிருக்காங்க. இதுக்கும் விஜய்சேதுபதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுல அவரு நடிக்கிறாரு. அவ்வளவு தான். படத்தை இயக்கியவர் மிஷ்கின். அவர் தான் சுருதியை அப்ரோச் பண்ணிருக்காரு. சுருதி குரல் கொடுத்தது யாரோ ஒரு பெண் பாடப்போறாங்க. அதனால இதற்கும் அதற்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story