ரஜினி அப்படி என்ன தப்பாக கூறினார்? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

3cbdb61597bcc92381540c6ac6bca4dd

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்தால் உடனடியாக அந்த கருத்துக்கு நூறு எதிர்க்கருத்து உருவாகி வருவது கடந்த சில மாதங்களாக நடைபெறும் வழக்கமாக இருக்கின்றது. ரஜினிகாந்த் ஒரு பிரச்சனை குறித்து கருத்து கூறினாலும், கூறாவிட்டாலும் அவரை விமர்சனம் செய்வது ஒருசில அரசியல்வாதிகளின் வாடிக்கையாக உள்ளது

இந்த நிலையில் குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா குறித்தும், அதனால் ஏற்படும் வன்முறைகள் குறித்தும் ரஜினிகாந்த் நேற்று ஒரு டுவீட்டை பதிவுசெய்தார். இந்த டூவிட்டுக்கு எதிர்பார்த்தது போலவே டுவிட் பதிவான ஒரு சில நிமிடங்களிலேயே கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்பு கருத்துக்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன

ரஜினி கூறும் கருத்துக்கு எதிர்ப்பான கருத்தை கூறினால் மட்டுமே தங்கள் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் என்பதால் பெரும்பாலான அரசியல்வாதிகள் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கேள்விகளை எழுப்பியும் பரபரப்பை ஏற்படுத்தினர். அனேகமாக இன்று அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் ரஜினியின் டுவிட்தான் விவாதமாக இருக்கும்.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டி ஒன்றில் ’போராட்டமே தேவையில்லை என்று ரஜினிகாந்த் கூறவில்லை என்றும் வன்முறை இல்லாமல் போராட்டம் செய்யுங்கள் என்றுதான் அவர் கூறினார் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரஜினியின் கருத்தை அதிமுக அதிகரிப்பதாக கருதப்படுகிறது

 

Related Articles

Next Story