அதான் எங்களுக்கு தெரியுமே?.. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? - ரஜினியை வச்சும் செய்யும் நெட்டிசன்கள்

da7cfbf7d178e0fc4b11435d31988b11

போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் பல இடங்களில் நடந்த மோதலால் வன்முறை கையில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் ‘எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த நெட்டிசன்கள் ‘அது எல்லாருக்குமே வருத்தம் தான். இந்த மாதிரி எல்லாம் தேவை இல்லாத மக்களுக்குள்ள பிளவு ஏற்படுத்துர சட்டங்கள் வருதே.. அதுக்கு உங்கள் கருத்து என்ன சொல்லவே மாற்றீங்களே’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவரின் கருத்து பாஜகவின் கருத்துகளை ஒத்திருப்பதாகவே பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தூத்துக்குடி போராட்டத்தின் போது இதுபோலவே ரஜினி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story