தளபதி 64 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?  இதோ தெரிந்துகொள்ளுங்கள்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் அதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘மாஸ்டர் ‘ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 

விஜய்யின் இமேஜுக்கு ஏற்ற அட்டகாசமாக அமைந்துள்ள இந்த டைட்டிலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த டைட்டில் அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் டிரெண்ட் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Published by
adminram