நயன்தாரா மீண்டும் புரபோஸ் செய்தால்? சிம்புவின் ஆச்சரிய பதில்

Published on: February 13, 2020
---Advertisement---

58b9c5dc3f18772bf31dd6deaac8e72d

இந்த நிலையில் திடீரென இந்த காதல் பிரேக் அப் ஆகியது. இந்த பிரேக் அப்பிற்கு என்ன காரணம் என்று இருதரப்பில் இருந்தும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் சிம்பு அளித்த பேட்டியில் ’மீண்டும் நயன்தாரா உங்களிடம் புரபோஸ் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு சிம்பு மெச்சூரிட்டியான பதிலை கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து இருந்தோம். அதன் பின்னர் ஒருசில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டோம். இனி மேல் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் நயன்தாரா தற்போதும் தனது நண்பராக உள்ளார். அவரிடமிருந்து புரபோஸ் வர வாய்ப்பு இல்லை’ என்று கூறினார். மேலும் இருவரும் தொடர்ந்து நண்பர்களாகவே இருப்போம் என்றும் கூறினார். 

மேலும் நயன்தாரா உங்களுக்கு முதல் காதலியா? என்று கேட்டதற்கு ’அப்படி எல்லாம் இல்லை நான் பல பெண்களை காதலித்துள்ளேன்’ என்று ஜாலியாக கூறியுள்ளார். இப்போது நயன்தாராவை நேரில் பார்த்தால் கூட ஹலோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு நட்புடன் தான் இருக்கிறோம் என்றும், எனவே முடிந்து போனதை பற்றி தயவு செய்து பேச வேண்டாம் என்றும் அவர் மெச்சூரிட்டியாக பதில் கூறியுள்ளார் சிம்புவின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Comment