வசனத்தை நீக்கா விட்டால்? – தர்பார் படத்திற்கு எதிராக சசிகலா தரப்பு எச்சரிக்கை

Published on: January 9, 2020
---Advertisement---

38f08701687421ea90cbd3ce8edf6fb7-1

தர்பார் திரைப்படத்தில் ஓரிடத்தில் ‘பணம் இருந்தால் சிறையில் இருந்து கொண்டே பர்ச்சஸ் கூட செல்லலாம்’ என ஒரு காவல் அதிகாரி ரஜினியிடம் கூறும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘பணம் பாதாளம் வரை பாயும். அந்த வசனம் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது என நினைக்கிறேன். இதுபோன்ற வசனங்கள் வரவேற்கத்தக்க ஒன்று’ என தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தர்பார் படத்தில் இடம் பெற்ற வசனத்தை நீக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும். மேலும், ஆதாரமின்றி ஜெயக்குமார் பேசினால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment