என்னது.. ராமராஜன் பட காப்பியா வானம் கொட்டட்டும்? – நெட்டிசன்கள் கலாய் !

மணிரத்னம் தயாரிப்பில் அவரது உதவியாளர் இயக்கியுள்ள வானம் கொட்டட்டும் என்ற படம் ரிலீஸாகியுள்ள நிலையில் ராமராஜன் படத்தின் காப்பி என ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரின் நடிப்பில் தனா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது வானம் கொட்டட்டும் என்ற படம். இந்த படத்தில் சரத்குமாரின் நடிப்பு மட்டுமே கவனம் ஈர்க்கும் விதமாக உள்ளதாகவும், திரைக்கதையும் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள உணர்வுகள் செயற்கையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மற்றொரு தரப்பினர் இது ராமராஜனின் தங்கமான ராசா என்ற படத்தின் காப்பி என்று கூறி வருகின்றனர். இரு படத்திலும் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றுவரும் தந்தையை அவரது மகன் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் கதை என்பதால் இப்படி சொல்லப்படுகிறது.

Published by
adminram