ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். மேலும், ஒரு பார்ட்டியில் சனம் ஷெட்டி தனது பழைய காதலுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, அவரிடமிருந்து விலகினேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் விஜய் ‘தர்ஷன் கூறியது போல் அந்த பார்ட்டில் எதுவும் நடக்கவில்லை. நானும், சனம் ஷெட்டியும் சந்தித்துக் கொண்டோம். ஆனால், நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. நானும் சனம் ஷெட்டியும் பிரிந்து விட்டோம். தற்போது எங்களுக்குள் எதுவுமில்லை. அன்று அந்த திருமணத்திற்கு அவர் வருவார் என எனக்கு தெரியாது. இந்த பிரச்சனையை பொறுத்த வரை மீடியாக்களை சந்திப்பதை விட தர்ஷனும், சனம் ஷெட்டியும் தனிமையில் பேசி தீர்த்துக்கொள்வதே நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சனம் ஷெட்டியும், அவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் இவரை விட தர்ஷன் அழகாகவே இருக்கிறார் என பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…