சரத்குமார், விஷால் மோதலுக்கு பிளாஷ்பேக்கைப் பாருங்க... சொன்னா நம்ப மாட்டீங்க...! ஆனா அவர் சொல்றாரே..!
நடிகர் சங்க தேர்தலில் 2022ல் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட நடிகர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது நாசர் தலைவர், விஷால் பொருளாளர் ஆனார். அதே நேரம் சரத்குமார், விஷால் மோதல் நடக்க என்ன காரணம் என பிரபல நடிகர் ராதாரவி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
29 வருஷமா நடிகர் சங்கத்துல போஸ்ட்ல இருக்கேன். தலைவரா 14 வருஷம். கமிட்டி மெம்பரா விஜயகாந்த் பீரியட்ல 6 வருஷம். சரத்குமார் சீசன்ல தலைவரா இருக்கும்போது நான் மூணு தடவை செகரட்டரியா இருந்தேன்.
நாடகக்கலைஞர்களுக்காகத் தான நடிகர் சங்கமே இருக்கு. அது கூட பேசும்போது விஷால் சொன்னாராம். அவர் வெட்டியா வேலை செய்றாருன்னு. எஸ்.வி.சேகர் தான் அவரைக் கண்டிச்சு அப்படி எல்லாம் சொல்லாதேன்னு சொன்னாராம். அப்படி சொன்னா யூனியன்ல கேட்பான்.
நான் நடிகர் சங்கத்துல சரத்குமார் சைடுல நின்னேன். அவர் ஆரம்பத்துல கேட்டதால அப்படியே இருந்தேன். அதுக்கு அப்புறம் வருஷம் ஓடிப்போச்சு. சொல்றவங்க சொல்வாங்க. ராதாரவி சார் சத்தமா பேசுனாங்க. கோபமா பேசுனாங்க. அதனால பிடிக்காம வந்தாருன்னு. என் வீட்லயே விஷால் வந்து இல்லன்னு மறுக்க முடியாது.
என் வீட்ல பேசும்போது இப்படி இப்படி பிளான் பண்ணனும் சொன்னாரு. சரத்குமாருக்கிட்ட ஒத்துக்கிட்டு இருந்தாருன்னா தேர்தலே கிடையாது. அவரு வந்து எப்படின்னா ஹீரோ பர்ஸ்டீஜை எப்படி விடுறதுன்னு இருந்துட்டாரு. 2 அணியா பிரிஞ்சதுக்கு அதுதான் முக்கிய காரணம்.
'மருது' படத்துல நடிச்சிருக்கோம். அப்ப இதைப் பத்திப் பேசவே இல்ல. நான் இதைத்தான் சொன்னேன். எங்க அப்பாவும் எம்ஜிஆருமே நல்லா பேசிக்கிட்டாங்க. நமக்கு என்ன இருக்குன்னு கேட்டேன். பார்ப்போம். விஷால் ஏதோ நல்லது பண்ணிக்கிட்டு இருக்காரு. நாசர் தலைவரு. கார்த்தி பொருளாளர். நல்ல ஒர்க் பண்றாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல சரத்குமார் தனது அம்மா சாயாதேவியை விவாகரத்து செய்தது வரலட்சுமிக்கு உறுத்தலாக இருந்ததாம். அதற்கு பழிவாங்க விஷால் தான் சரியான ஆள் என்றும் அவர் தான் தன் எண்ணங்களைக் கடத்த சரியான ஆள் என்றும் கருதி வரலட்சுமி அவர் மூலமாக தனது எண்ணங்களை நிறைவேற்றிவருவதாகவும் சொன்னதுண்டு.