More

ஜார்கண்ட் மாநிலத்தில் என்ன ஆகும்? எக்ஸிட்போலின் அதிர்ச்சி முடிவு

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக நவம்பர் 30, இரண்டாவது கட்டமாக டிசம்பர் 7, மூன்றாவது கட்டமாக டிசம்பர் 12, நான்காவது கட்டமாக டிசம்பர் 16 மற்றும் ஐந்தாவது கட்டமாக டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது

Advertising
Advertising

இன்று இறுதி மற்றும் 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதை அடுத்து எக்ஸிட்போல் முடிவுகளும் தற்போது வெளிவந்துள்ளன. இந்த கருத்துக் கணிப்பின்படி எந்த கட்சிக்கும் இம்மாநிலத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் கூறப்படுகிறது. எனவே தேர்தலுக்குப் பின்னர் எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

ஜார்கண்ட் மாநில தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் பாரதிய ஜனதா கட்சி தனித்தும், ஜார்கண்ட் ஸ்டூடண்ட் யூனியன் மற்றும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 23-ஆம் தேதி எண்ணப்படுகின்றன என்பதும் அன்று காலை 8 மணி முதல் முன்னனி நிலவரங்கள் வெளிவரும் என்றும் இரவுக்குள் முழு முடிவுகள் வெளியாகி விடும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Published by
adminram

Recent Posts