More

விஜய் என்ன தீவிரவாதியா? ரசிகர் மன்ற மாநில செயலாளர் ஆவேசம்

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் நேற்று விஜய்யிடம் விசாரணை செய்ய அதிகாரிகள் ’மாஸ்டர்’ படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலிக்கு சென்றனர் என்பது தெரிந்ததே

Advertising
Advertising

மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் சம்மனை கொடுத்த வருமானவரித்துறை அதிகாரிகள் அவரிடம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்பதால் உடனே சென்னைக்கு அழைத்துச் செல்லப் போவதாக தெரிவித்தனர். அப்போது விஜய் தன்னுடைய காரில் வருவதாக கூறிய போதும் அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து தங்களுடைய காரிலேயே அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் விஜய் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவ்வளவு அவசரமாக விசாரணை செய்ய வேண்டிய காரணம் என்ன? என்று ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து விஜய் ரசிகர் மன்ற மாநில செயலாளர் ராஜா என்பவர் கூறியபோது ’மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவசர அவசரமாக அழைத்து வந்து விடிய விடிய விசாரணை நடத்த விஜய் என்ன தீவிரவாதியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்

விஜய்க்கு சம்மன் அனுப்பி அவருக்கு செளகரியமான ஒரு நாளில் அவரிடம் விசாரணை செய்திருக்கலாம் என்றும் அவசர அவசரமாக ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரி ரெய்டு நடந்து கொண்டிருந்த நாளிலேயே விஜய்யிடமும் விசாரிக்க வேண்டிய அவசியம் எதற்காக? என்றும் இதன் பின்னணி என்ன? என்றும் யாருடைய கட்டளையால் இது நடந்தது? என்றும் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய் தனது படங்களிலும் பேட்டிகளிலும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறுவதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விஜய் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

Published by
adminram

Recent Posts